இந்தியாவில் கணவன் வெறிச்செயல் திருமணம் முடிந்த 7 நாட்களில் புதுமணப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உத்தரபிரதேசம், ஹமிர்பூரில் பொறியாளர் ஒருவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. முதலிரவில் பாலியல் செயல்திறன் அதிகரிக்கும் மாத்திரைகளை உட்கொண்டு மனைவியுடன் உறவில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் பெண்ணின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி 7 நாட்களில் புதுமண பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகையில்,
புது மணப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அளவுக்கு அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அவரது அந்தரங்கப் பகுதியில் ஏற்பட்ட காயங்களால் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை யடுத்து கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்து , கணவன் குடும்பத்துடன் ஊரைவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில்ம் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் கணவரை கைது செய்வதற்கான தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை மாத்திரைகளை பயன்படுத்த தெரியாமல் பயன்படுத்தி, கணவனால் , புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது