ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையில் வரக்கூடிய சஷ்டி தினத்தை பெரிய சஷ்டியாக கருதி முருகப்பெருமானுக்கு வழிபாடுகள் செய்வார்கள்.
அந்த வகையில் இன்றைய தினம் (15.02.2024) வியாழக்கிழமையோடு வந்திருக்கும் இந்த சஷ்டியானது குபேர சஷ்டி என்று சொல்லப்படுகிறது.
இந்த சஷ்டி நமக்கு செல்வ வளத்தை தரக்கூடியதாக அமைந்திருக்கிறது. அத்துடன் வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது.
இன்றைய சஷ்டி தினம் வியாழக்கிழமை உடன் வந்திருப்பதால் குருவின் அனுகிரகத்தையும் நமக்கு பெற்று தரும்.
இந்த வழிபாடு செய்ய விரும்புபவர்கள் காலையில் எழுந்து குளித்து முடித்து பிரம்ம முகூர்த்த வேலையிலே பூஜையறையில் ஒரு தீபம் ஏற்றி விடுங்கள்.
பொதுவாக எந்த ஒரு வழிப்பாடும் விரதமும் தொடங்குவதாக இருந்தால் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் துவங்குவது சிறப்பானதாக அமையும்.
அடுத்து இன்று வியாழக்கிழமை. குபேரருக்கு உகந்த நாள் குபேர வழிபாடு அல்லது மாலை 5:30 மணிக்கு மேல் செய்வது சிறந்தது.
ஆகையால் இந்த வழிபாட்டையும் மாலை 5.30 மணிக்கு மேல் செய்யதால் நல்ல பலனை பெறலாம்.
நாளை குருபகவானுக்கும் உகந்த நாள் என்பதால் அவருக்கு உகந்த கொண்டக்கடலையே முருகப்பெருமானுக்கும் நெய்வேத்தியமாக வைக்கலாம்.
கொண்டைக்கடலையை வைத்து ஏதேனும் ஒரு நெய்வேத்தியம் செய்து கொள்ளுங்கள் அல்லது வெறும் சுண்டலாக கூட அவித்து வைத்து விடுங்கள்.
முருகப்பெருமானுக்கு செவ்வரளி பூக்களால் மாலை சூட்டி விடுங்கள்.
அதே போல் முருகருக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.
வெற்றிலை தீபம் ஏற்றுபவர்கள் அதையும் இந்த நேரத்தில் ஏற்றலாம் நல்ல பலனை கொடுக்கும்.