முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவ்வாறு தனிநபர் ஒருவரிடம்( பசில் ராஜபக்ச) உள்ளது என்றால் நாட்டை ஆள்வதற்கு ஜனாதிபதியும் ஆலோசகர்களும் ஏன் தேவை ? என ஒமல்பே சோபித தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பசில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ளதால் பொதுமக்களிற்கு சலுகைகளும் நிவாரணங்களும் கிடைக்கும் என அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தனிநபர் ஒருவருக்கு தனது விருப்பத்தின் அடிப்படையில் செயற்படுவதற்கும் சலுகைகளை வழங்குவதற்கும் அதிகாரம் உள்ளது என்றால் அமைச்சரவை எதற்கு இருக்கின்றது அதற்கான தேவை என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவ்வாறு தனிநபர் ஒருவரிடம் உள்ளது என்றால் நாட்டை ஆள்வதற்கு ஜனாதிபதியும் ஆலோசகர்களும் ஏன் தேவை ? எனவும் ஒமல்பே சோபித தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறான சிந்தனை உள்ள தனிநபர்களால் நாடு ஆபத்தை எதிர்கொள்ளும் ஜனநாயகத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார். நாட்டின் தடுப்பூசி வழங்கும் திட்டம் கரிசனை அளிக்கும் ஒன்றாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நிதி தொடர்பான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது உலகவங்கியின் நிதி உதவி தேவைப்படலாம் என தகவல்கள் வெளியாகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.