குருணாகல் – கண்டி அதிவேக நெடுஞ்சாலையில் நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், சட்டவிரோதமாக உள்நுழைந்து ஓட்டப்பந்தயம் நடத்திய உந்துருளி மற்றும் மகிழுந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
உந்துருளியும் மகிழுந்தும் நேற்று வியாழக்கிழமை இரவு ஏழு மணியளவில் இந்த பாதையின் ஊடாக குருணாகலை நோக்கிப் பயணித்த நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்து இடம்பெறும் போது குறித்த மகிழுந்தில் 5 பேர் பயணித்துள்ளனர்.
அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், ஏனைய மூன்று பேரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
மகளின் பூதவுடலுக்காக கதறும் தாய்:மனிதம் எங்கே?
மின் தடைக்கு காரணம் அணில்:சிக்கியது ஆதாரம்
இந்த நெடுஞ்சாலை இன்னும் போக்குவரத்துக்குத் திறக்கப்படாத நிலையில், சட்டவிரோதமான முறையில் அவர்கள் இந்தப் பாதை ஊடாக பயணித்துள்ளனர்.
இதேவேளை, பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட ஓர் நாளிலே 11 க்கும் அதிகமான விபத்துகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.