சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் இருப்பது யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்த விஷயம் தான் அது.
அன்றாட சரும பராமரிப்பு என்பது வழக்கத்தின் ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது. ஆனால் அதன் பலன்களை அதிகப்படுத்தவும், பக்க விளைவுகளை தடுக்கவும் அதனை சரியான முறையில் செய்வது அவசியம்.
அந்த சரும அழகை பெறுவதற்கு நாம் பல யுக்திகளை கையாண்டிருப்போம். ஆனால் இந்த பதிவில் நாங்கள் உங்களுக்காக கூறப்போவது சரும அழகை மேம்படுத்த கூடிய ஒரு ஜுஸை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
செலரி ஜுஸ் நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கீரையில் தண்ணீர் அதிகமாக உள்ளது. அதனால் இது சரும நீரேற்றத்தை ஊக்குவித்து ஆரோக்கியமான சருமத்திற்கு வழிவகுக்கிறது.
ஒரு கப் செலரி ஜூஸில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், சருமத்தின் ஈரப்பதத்தை இது தக்கவைத்து கொள்கிறது.
இது சரும வறட்சியைத் தடுத்து, பளபளப்பான சருமத்தைப் பெற உதவுகிறது. தோல் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் வயதான அறிகுறிகளை இல்லாமல் செய்கிறது.
அதில் காணப்படும் வைட்டமின் கே ரத்த உறைதலை ஊக்குவித்து கருவளையங்களை மாற்றுகிறது. காயங்களால் உண்டாகும் தழும்புகளை இல்லாமல் செய்கிறது.
இதில் உள்ள வைட்டமின் ஏ தோலின் நிறத்தை பராமரிக்கிறது. இந்த காய்கறியில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது.
இதன் தண்டுகளை எடுத்து நறுக்கி அரைத்து அதன் சாற்றை எடுத்து வடிகட்டி தினமும் வெறுவயிற்றில் குடித்தால் சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.
ஆனால் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஜுஸை எடுத்து கொள்வதற்கு முன்னர் வைத்தியரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.