எளியவருக்கு கூட வலிய வந்து உதவும் எளிமையான தெய்வமெனில் அது விநாயகர் பெருமான் தான்.
இந்த விநாயகப் பெருமானை வணங்குவதற்கு பெரிதாக நாம் எந்த விரதமும் பூஜை முறைகளோ வழிபாடுகளோ செய்யத் தேவையில்லை.
ஒரே ஒரு அருகம்புல்லை வைத்து விநாயகா என்றாலே போதும் நம்முடைய வினைகள் அனைத்தையும் தீர்த்து வைத்திடுவார்.
அத்தகைய எளிமையான சக்தி வாய்ந்த முழு முதல் கடவுளான விநாயகரை நாம் நம்முடைய சங்கடங்களை தீர்த்துக் கொள்ளவும் கடன் தொல்லையில் இருந்து விடுபடவும் எளிமையான முறையில் வழிபட முடியும்.
இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது நம்முடைய வாழ்க்கை நல்ல முறையில் மாறும்.
இந்த வழிபாடு செய்வதற்கு சங்கடஹர சதுர்த்தி அன்று காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த வேளையில் குளித்து விட்டு பூஜை அறையில் முதலில் ஒரு தீபம் ஏற்றி வைத்து வழிபாட்டை தொடங்க வேண்டும்.
இவருக்கு விரதம் இருந்து பெரிய அளவில் பூஜைகள் ஏதும் செய்து வழிபடத் தேவையில்லை ஆகையால் அன்றைய தினம் அசைவம் மட்டும் சாப்பிடாமல் இருந்தால் போதும்.
அதன் பிறகு 11 அரச இலைகளை கொண்டு வந்து விடுங்கள். இந்த அரச இலைகளை கொண்டு தான் நாம் தீபம் ஏற்ற வேண்டும்.
சங்கடஹர சதுர்த்தி என்றாலே மாலை நேரத்தில் வழிபாடு செய்வது தான் சிறந்தது.
ஆகையால் அன்றைய தினத்தின் மாலை நீங்கள் வீட்டு பூஜை அறையில் விநாயகர் படம் சிலை எதுவாக இருப்பினும் எடுத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பூக்கள் சூடி அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு 11 அகல்விளக்கை எடுத்து சுத்தமாக துடைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
இதற்கு நாம் வீட்டில் பயன்படுத்திய பழைய அகலை பயன்படுத்தலாம். இப்போது விநாயகர் படத்திற்கு முன்பாக இந்த 11 அகலிலும் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். நெய் ஊற்றி ஏற்றி தீபம் ஏற்றுங்கள்.
வசதி உள்ளவர்கள் நெய் தீபமும் ஏற்றலாம். நெய்வேத்தியமாக அவல் பொரிகடலை வைத்தாலும் கூட போதும்.
அதன் பிறகு விநாயகருக்கு முன் அமர்ந்து ஓம் விநாயகா போற்றி ஓம் கணபதியே போற்றி என்று உங்களுக்கு தெரிந்த விநாயகர் மந்திரங்களை பாராயணம் செய்யுங்கள்.
அந்த நேரத்தில் உங்களுடைய சங்கடங்கள் எதுவும் அது தீர வேண்டும்.
கடன் தொல்லை தீர வேண்டும் பண வரவு அதிகரிக்க வேண்டும். என உங்கள் வாழ்க்கையில் என பிரச்சனையாக உள்ளதோ அதை அவரிடம் சொல்லி மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
இந்த வழிபாடு முடிந்த பிறகு உங்கள் வீட்டின் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று 11 முறை விநாயகரை வலம் வந்து உங்களுடைய பிரார்த்தனைகளை மனதார சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள்.
இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது உங்களுக்கு காண பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
பணவரவு அதிகரிக்கும் கடன் தொல்லை நீங்கும் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
இந்த வழிபாடு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.