பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் உட்பட 93 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேரைத் தவிர்த்து சிறிய குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 77 பேரும் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட காலம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்திருந்தார்.அதன்படி, விடுதலை செய்யக்கூடிய 17 சந்தேகநபர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். பொசன் பூரணையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் இவர்களை விடுதலை செய்ய முடியும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.