ஜாதக அமைப்பின்படி கிரகங்கள் அவ்வப்போது இராசியை மாற்றி சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும்.
அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் செவ்வாயும், குரு பகவானும் பரிவர்த்தனை ராஜயோகத்தை உருவாக்கியுள்ளனர்.
அதுவும் இந்த ராஜயோகமானது டிசம்பர் 27 ஆம் திகதி முதல் உருவாகிறது.
ஏனெனில் இந்நாளில் தான் செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் நுழைகிறார்.
இந்த நேரத்தில் குரு பகவான் மேஷ ராசியில் பயணிக்கிறார். இப்படி குரு பகவானின் ராசியில் செவ்வாயும், செவ்வாயின் ராசியில் குரு பகவானும் பயணிப்பதால், பரிவர்த்தனை யோகம் உருவாகிறது.
இந்த யோகமானது 10 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது.
இப்படி உருவாகும் பரிவர்த்தனை யோகத்தின் தாக்கமானது 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் எதிர்பாராத பணத்தைப் பெறுவதோடு, அதிர்ஷ்டத்தின் ஆதரவும் கிடைக்கும்.
இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த பரிவர்த்தனை யோகமானது நிதி நிலையை வலுப்படுத்தும். மேலும் இந்த ராசிக்காரர்களின் திட்டங்கள் அனைத்தம் வெற்றிகரமாக நிறைவேறும்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையில் வெற்றி பெறுவார்கள். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். நல்ல நிதி நன்மைகளைப் பெறுவீர்கள்.
ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சொத்து மற்றும் புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு பரிவர்த்தனை ராஜயோகமானது சாதகமாக இருக்கும்.
தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சிலர் புதிய ஆர்டர்களைப் பெறக்கூடும்.
நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
சிலர் புதிய வேலைகளைத் தொடங்கி, நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கம். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படும்
இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் கடின உழைப்புக்கு ஏற்ற முழு பலனும் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு பரிவர்த்தனை ராஜயோகம் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைத் தரும். பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள்.
சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்களுடனான நட்பு கிடைக்கும்.
செவ்வாயின் அருளால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.