ஸ்மார்ட் போன் உலகில் கடந்த சில ஆண்டுகளாகவே தனக்கென்று ஒரு தனி முத்திரை, தனி பிராண்ட் கொண்டுள்ள நிறுவனம் தான் Redmi. ஆரம்பகால கட்டத்தில், இந்த ஸ்மார்ட் போன்கள் அதிகமாக ஹீட் ஆகிறது, வெடிக்கிறது என்றெல்லாம் சர்ச்சை எழுந்தது.
ஆனால், காலங்கள் செல்ல, செல்ல Redmi தன்னுடைய தரத்தை உயர்த்து கொண்டே தான் வருகிறது என்று சொல்லலாம். மற்ற ஸ்மார்ட் போன்களும் ஒப்பிடும் Redmi எப்போதுமே குறைவான விலைக்கு, அதிக சிறப்பம்சங்களுடன் தான் தங்கள் ஸ்மார்ட் போனை இறக்குவார்கள்.
அப்படி இந்த முறை அவர்கள் அறிமுகப்படுத்தவுள்ள புதிய போன், Redmi Note 9 Pro 5G.இதற்கு முன் இந்த சீரிஸ் வரிசையில், Redmi Note, Redmi Note 9, Redmi Note Max என இந்த நிறுவனம் மொபைல் போன்களை வெளியிட்டுள்ளது.
Redmi Note 9 Pro 5G சிறப்பம்சங்கள்
இந்த முறை Redmi தங்களுடைய ஸ்மார்ட் போனின் PROCESSOR-ல் மிகுந்த கவனம் கொண்டுள்ளனர், அதன் காரணமாகவே Qualcomm Snapdragon 750G-ஐ வைத்துள்ளனர்.
தற்போது இருக்கும் காலத்தில் கேம் ப்ரியர் இருக்கவே முடியாது. அதுமட்டுமின்றி போன் கேங் ஆகக் கூடாது. பல ஆப்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றால், ஒரு 6GB RAM-க்கு இதை நாம் ஒரு சிறந்த PROCESSOR என்று சொல்லலாம்.
கமெரா
இந்த போனில் கமெரா செல்பி கமெரா 16 மெகா பிக்சலும், பேக் கமெராவில் 108 மெகா பிக்சலாகவும், 8 மெகா பிக்சல் வைட் ஆங்கில், 2 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கில், மற்றும் 2 மெகா பிக்சல் டெப்த் கமெரா என பின்பக்கம் நான்கு கமெரா கொடுத்துள்ளனர்.ரெட்மியை பொறுத்தவரை கமெராவில் எந்த குற்றமும், சொல்ல் முடியாது. அது போன்று தான் இதிலும், குறிப்பாக 108 மெகா பிக்ஸல் என்ற போது, நாம் என்ன சொல்ல முடியும்.
பேட்டரி
போன் வாங்கும் போது, ஒருவர் முக்கியமாக கவனிப்பது பேட்டரி லைப் தான், இந்த முறை ரெட்டி பேட்டரி விஷயத்திலும், கொஞ்சம் அக்கறை எடுத்து, 4820mah கொடுத்துள்ளனர்.
இது குறைந்தபட்சம் ஒரு நாள் முழுவதும் நீடிக்குமாம்.
STORAGE
A9CYMJ
6GB-RAM 128-Storage
ஆண்ட்ராய்டு வெர்சன்- Android v10 (Q)
விலை நிலவரம்இந்த போன் வரும் ஜுலை மாதம் வெளியிட இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன் படி 6GB-RAM 128-Storage கொண்ட Redmi Note 9 Pro 5G-யின் ஆரம்பவிலையாக 17999-ஆக நிர்ணயித்துள்ளது.
கிடைக்கும் வண்ணங்கள்
Lake Light Autumn Scenery
Blue Sea
Silent Sky colour