வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு போட்டியாக டெலிகிராம் என்ற செயலி ஆனது பல புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.
வாட்ஸ்அப் போலவே டெலிகிராம் செயலியும் பல்வேறு முக்கியமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
குறிப்பாக உங்களது டெலிகிராம் செயலியில் போன் நம்பரை மறைக்க முடியும். இந்த வசதி நமக்கு பல்வேறு வகையில் பாதுகாப்பாக இருக்கும்.
இப்போது டெலிகிராம் செயிலியில் உங்களது போன் நம்பரை எப்படி மறைப்பது என்பதை பற்றிய வழிமுறைகளைப் பார்ப்போம்.
வழிமுறை
முதலில் உங்களது டெலிகிராம் செயலியில்settings பகுதிக்கு செல்லவும்.
அடுத்து settings பகுதியில் இருக்கும் Privacy and Security என்பதை தேர்வுசெய்யவும்.
Privacy and Security தேர்வுசெய்தவுடன், போன் நம்பர் (phone number) என்பதை கிளிக் செய்யவும்.
போன்நம்பரை கிளிக் செய்தவுடன் மூன்று விருப்பங்கள் காணப்படும். everybody, my contacts, nobodyஎன்ற மூன்று விருப்பம் இருக்கும்.
அதில் nobody என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம்டெலிகிராம் செயலியில் உங்களது போன் நம்பரை மறைக்க முடியும்.