ஒடிசா மாநிலத்தில் சாலை விபத்துகளை குறைக்க கனரக வாகன ஓட்டுனர்களுக்கு இலவச டீ வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் அதிகளவில் சாலை விபத்துகள் நடக்கின்றன. அதிலும் குறிப்பாக அடிக்கடி நெடுஞ்சாலைகளில் அதிகாலை வேளைகளில் அதிகமான சாலை விபத்துகள் நடக்கின்றன.
இதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு இந்த வாரம் சாலை பாதுகாப்பு வாரமாக ஒடிசா அரசு கடைபிடிக்க திட்டமிட்டுள்ளது.
இதன் காரணமாக, ஒடிசா அரசு அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் டிரக் ஓட்டுநர்களுக்கு இலவச டீ வழங்க அறிவுறுத்தியுள்ளது.
இன்று முதல் ஜனவரி 7, 2024 வரை, காலை 3 மணி முதல் காலை 6 மணி வரை, ஓட்டுநர்களிடையே தூக்கம், சோர்வு காரணமாக ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் வகையில் இலவசமாக டீ வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் பலன்கொடுக்கும் பட்சத்தில் நிரந்தரமாக இந்த திட்டத்தை செயல்படுத்த ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது.