சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவில் வயலோரம் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நிந்தவூர் பிரதேச சபை கட்டிடத்திற்கு பின்னால் அமைந்துள்ள வயல் காணியில் சடலமாக காணப்படுபவர் இறைச்சி கடை சார்ந்த கூலித்தொழிலில் ஈடுபட்டு வரும் 60 வயதான உபாலி என அறியப்படும் ஜாபீர் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் போதைப்பொருள் பாவனை பழக்கம் உள்ளவர் என்றும், கடந்த காலங்களிலும் இவ்வாறு போதைப்பொருள் மூலம் நிதானமிழந்து வீதிகளில் விழுந்து கிடந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.