Brand எனப்படும் வியாபாரக் குறியீடு என்பது குறிப்பிட்ட நிறுவனத் தயாரிப்புகளுக்கு ஒரு சொற்றொடராகவே மாறிவிடும். அப்படியான ஒரு வியாபாரக் குறியீடு தான் பார்லே-ஜி.
இந்தியாவின் மிகப்பெரிய வியாபாரக் குறியிடுகளில் ஒன்றாக மாறியுள்ளது பார்லே-ஜி. இந்தியாவில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சி காலகட்டத்தில் ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
1900களில் 12 வயது சிறுவன் தெற்கு குஜராத்தில் இருந்து ஏழ்மை காரணமாக மும்பை பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளான். உண்மையில் அந்த சிறுவன் வீட்டைவிட்டு ஓடிவிட்டான்.
Mohanlal Chauhan என்ற அந்த சிறுவன், வேலை செய்து பிழைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தபோது, முதலில் தையல் கற்றுக்கொள்ள விரும்பினான். மிக விரைவிலேயே அதன் நுணுக்கங்களை கற்றுக்கொண்டான்.
இதுவே, மேலும் இரு தொழில்களை உருவாக்கத் தூண்டியது. காலப்போக்கில், தமது 5 மகன்களுக்கும் தையல் தொழிலில் பயிற்சி அளித்து, அவர்களையே முன்னெடுத்து நடத்தவும் வாய்ப்பளித்தார்.
ஆனால் முதல் உலகப் போரின் போது தையல் தொழில் முடங்கியது. இதனையடுத்து மனம் தளராத மோகன்லால் குடும்பம், மிட்டாய் நிறுவனம் ஒன்றை துவங்கியது. அதில் இருந்து தான் பார்லே குழுமம் உருவானது.
தமது மிட்டாய் நிறுவனத்திற்காக ஜேர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்த மோகன்லால், மொத்த சேமிப்புத் தொகையான ரூ 60,000 செலவிட்டு ஜேர்மன் இயந்திரங்களை இறக்குமதி செய்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததும், மோகன்லாலின் பார்லே-ஜி மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றது. பிரித்தானிய நொறுக்குத் தீனிகளுக்கு மாற்றாக. விலை மலிவான பார்லே-ஜி செழிக்க ஆரம்பித்தது.
மிக விரைவிலேயே Coca-Cola நிறுவனத் தயாரிப்புகளுக்கு பார்லே தயாரிப்புகள் கடும் போட்டியாக அமைந்தது. தற்போது பார்லே நிறுவனத்தை விஜய் சவுகான் என்பவர் முன்னெடுத்து நடத்தி வருகிறார்.
மேலும், பார்லே தயாரிப்புகளின் வருவாய் என்பது 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை தொடும் என்றே நம்பப்படுகிறது. தற்போதைய வருவாய் என்பது இந்திய மதிப்பில் ரூ 16,202 கோடி என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, விஜய் சவுகான் மற்றும் அவரது குடும்பத்தினரின் மொத்த சொத்து மதிப்பு என்பது 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் என்றும் அதாவது இந்திய மதிப்பில் ரூ 45,824 கோடி என்றே கூறப்படுகிறது.