இந்திய தலைநகர் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த மருத்துவ மாணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான ஹரியானாவைச் சேர்ந்தவர் மயங் கார்க் (26). இவர், மகாராஷ்டிராவின் வார்தாவில் எம்.பி.பி.எஸ் படித்துள்ளார்.
இந்நிலையில், தேர்வு எழுதுவதற்காக டெல்லி மெட்ரோ ரெயிலில் பல்லப்கரில் இருந்து காஷ்மீர் கேட் வரை பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது பயணம் செய்து கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்துள்ளார். அவருக்கு அருகில் உள்ள பயணி ஒருவர் CPR முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.
பின்னர், டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் அவருக்கு தேவையான அனைத்து நடவடிக்கையையும் செய்தது. இதனையடுத்து, அவரை மூல்சந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், அங்கு மயங் கார்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இளம் வயதிலேயே இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாகவே, இளம் தலைமுறையினர் மாரடைப்பால் அதிக அளவில் உயிரிழப்பது தொடர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

