உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
உளுந்தை பயன்படுத்தி ஆரோக்கியமான மற்றும் சுவையான உளுந்து அல்வா எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
- உளுந்து- 250g
- நெய்- 150g
- முந்திரி- 100g
- சர்க்கரை- 250g
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- தண்ணீர்- 1/2 லிட்டர்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் உளுந்தை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அதனை ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.
பின் அதே வாணலில் 3 ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
நெய் வறுத்த வாணலில் தண்ணீர் ஊற்றி கொதிக்கின்ற போது அரைத்து வைத்திருந்த உளுந்து பொடியை சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.
பின் சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும். அவ்வப்போது நெய் சேர்த்து நன்கு கிளறவும். தொடர்ந்து இதில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி சேர்க்கவும்.
கை விடாமல் கிளறி, அல்வா பதத்திற்கு வந்ததும் அடுப்பை அனைத்து இறக்கினால் ஆரோக்கியமான உளுந்து அல்வா ரெடி.