தென்னிந்திய பிரபலத் தொலைக்காட்சிளுள் ஒன்றான ஜீ தமிழில் அட்டகாசமாக இடம்பெற்று வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது பரபரப்பான இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்த நிலையில், ஈழத்து குயிலான யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஷாவின் பாடலைக் கேட்டு அரங்கம் அதிர்ந்துள்ளதோடு, கில்மிஷாவுக்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
தனது அதீததிறமையால் இறுதி சுற்று போட்டிக்கு இரண்டாவதாக போட்டியாளராக இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த கில்மிஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார்
சரிகமப நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த திரைப்பிரபலங்கள் கில்மிஷாவின் திறமையை பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், “எனக்கே எதுவும் பாட வேண்டும் என்றால் இவரை கூப்பிடலாம்“ என்று மேடையில் சிறப்பு விருந்தினர் பேசிய காட்சி ரசிகர்களுக்கு பெரும் சந்தோசத்தை கொடுத்துள்ளது.
அதன்படி, மிக விரைவில் கில்மிஷா தனது பாடும் திறமையை சினிமாவிலும் முன்வைப்பார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.