பிக்பாஸ் 7ம் சீசன் ஷோ தற்போது 54 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த வாரம் ஷோ பரபரப்பு கூட காரணம் பிக் பாஸ் அறிவித்த ஒரு விஷயம் தான். வீட்டில் நடக்கும் டாஸ்கில் தோற்றுவிட்டால் தற்போது இருக்கும் போட்டியாளரை வெளியேற்றி இதற்கு முன் வெளியே போனவர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வருவார்கள்.
இரண்டு போட்டியில் தோற்றதால் இந்த வாரம் இரண்டு பேர் வருவது உறுதியாகி இருக்கிறது.
இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியே போவது யார் என்பது பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அக்ஷயா மற்றும் பூர்ணிமா தான் வெளியே போகிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது.