புத்தளம் மாவட்டத்தில் கீரிமட்டாவ பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தில் முந்தல் – அக்கர 60 கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கீரிமட்டாவ பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க, குறித்த வீதியோர மின்விளக்குகளை பொருந்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே குறித்த இளைஞன் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞன் ஏணி ஒன்றின் மூலம் மின்சாரத் தூணில் ஏறி மின்குமிழை பொருத்திக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனையடுத்து, மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான குறித்த இளைஞனை அங்கிருந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.