தமிழகத்திற்கு சென்ற இலங்கை வர்த்தகர் ஒருவர் சென்னையில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடத்தப்பட்ட இலங்கை வர்த்தகரின் மகளுக்கு தொலைபேசி மூலம் அழைப்பெடுத்த கடத்தல்காரர்கள் , தந்தையை விடுவிக்க 15 இலட்சம் இந்திய ரூபாவை கப்பமாக வழங்குமாறு கோரி அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான தீவிர விசாரணையின் பின்னர் கடத்தப்பட்டவர் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
மேலும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்ற நிலையில் இலன்கை வர்த்தகர் சென்னையில் கடத்தப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

