போலி தகவல்களை சமர்ப்பித்து, கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட யுவதியொருவர், நேற்று அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு- குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், முல்லைத்தீவு- மாங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (18) அதிகாலை 3.45 மணியளவில் கட்டார் நோக்கி புறப்படவிருந்த கியூ.ஆர்.669 என்ற விமானத்தில் பயணிப்பதற்கு இந்த யுவதி விமானநிலையத்துக்கு வருகைத் தந்துள்ளார்
. இதன்போது, அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளதுடன், இந்த யுவதியால் விமான நிலைய அதிகாரிகளுக்கு சமர்ப்பித்துள்ள பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையும் போலியானதென கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட யுவதியிடம் மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.