பொதுவாக பெண்கள் அடர்த்தியான மற்றும் நீளமான கூந்தலை தான் அதிகமாக விரும்புவார்கள்.
ஆனால் முடி உதிர்வு அதிகமாக இருக்கும் பொழுது எவ்வளவு அடர்த்தியாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் எலி வாலாக மாறி விடுகின்றது. எலி வால் என்றால் என்ன சிலர் யோசிப்பார்கள்.
முடியின் உறுதி தன்மை படிபடியாக குறைந்து இலகுவாக உடையக்கூடிய நிலையில் இருப்பதை தான் எலி வால் என கூறுகிறார்கள்.
கட்டையாக முடி இருப்பவர்களை விட நீளமான முடி இருப்பவர்கள் இந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
முட்டை உதிர ஆரம்பிக்கும் போதே அது குறித்து சிறந்த முடிவை எடுத்து விடுங்கள். இல்லையென்றால் எலி வால் நிச்சயம் வந்து விடும்.
அந்த வகையில் எலி வால் போன்று தலைமுடி காரணப்படுவதற்கு என்ன காரணம்? எப்படி சரிச் செய்யலாம்? என்பதனை கீழுள்ள பதிவில் பார்க்கலாம்.
1. தலைமுடிக்கு தேவையான புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலில் குறையும் போது தலைமுடி உதிர்வு பிரச்சினை கண்டிப்பாக வரும்.
2. அதிகமாக நாம் சிந்திக்கும் பொழுது உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படுகின்றது. இதனால் நாளடைவில் முடி உதிர்வு ஏற்படுகின்றது.
3. குளித்து விட்டு வெப்ப ஸ்டைலிங் கருவியை பயன்படுத்துவதால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதனால் தான் நடிகைகளுக்கு முடி மென்மையாக காணப்படுகின்றது.
4. கர்ப்பம், மாதவிடாய் அல்லது மருத்துவ நிலைமைகள் ஹார்மோன்கள் மாற்றமடைகின்றது. இதனால் தலைமுடி உதிர்கின்றது.
இதற்கான தீர்வு என்ன?
1. புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுதல்.
2. அதிகம் சிந்தனையை நிறுத்த வேண்டும்.
3. இயற்கையான வெப்பத்தில் தலைமுடியை காய வைக்க வேண்டும்.
4. கர்ப்பம், மாதவிடாய் காலத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
5. பயோட்டின் மற்றும் பிற பி வைட்டமின்கள் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்.