நகைச்சுவை நடிகர் யோகிபாபு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைபிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் யோகிபாபு சென்னையிலுள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில், தனது முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக் கொண்டார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் யோகிபாபு பகிர்ந்துள்ளார்.