பொதுவாக நன்றாக தூங்கிக் கொண்டிருந்த பெல் அடித்தவுடன் எழ வேண்டும் என்று நினைத்தால் அது கொஞ்சம் சோம்பலாக தான் இருக்கும். இவற்றையெல்லாம் தாண்டி உடலுக்கும், மனதிற்கு ஒரு வகையான புத்துணர்ச்சி கிடைக்க வேண்டும்.
ஆனால், காலைப் பொழுதில் உங்கள் மனம் மிகுந்த கவலையாக இருக்கிறது என்றால் என்ன செய்வது? என சிலர் யோசித்து கொண்டிருப்பார்கள்.
இது போன்ற பிரச்சினை 50 சதவீதமானவர்களுக்கு இருக்கின்றது. ஸ்ட்ரெஸ், தீர்வு காணப்படாத பிரச்சினைகள் அல்லது மருத்துவ ரீதியிலான பிரச்சினைகள் காரணமாக இதுபோன்ற மனக்கவலை ஏற்படுவது இயல்பு தான்.
இப்படி இருப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் சில செயற்பாடுகளை தொடர்ந்து கடைபிடித்தால் காலையில் சிறந்த மாற்றத்தை காணலாம். அப்படி என்ன தான் வழி என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
1. காலைப் பொழுதை இனிமையாக்குவதற்காக ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, நடைபயிற்சி, தியானம் போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும். இது உடலுக்கும் மனதிற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.
2. ஆழமாக மூக்கு வழியில் மூச்சை உள்ளே இழுத்து, வாய் வழியாக மூச்சை வெளியிடலாம். நாம் காலையில் மூச்சின் ஏற்ற, இறக்கத்தின் மீது கவனம் செலுத்தவும்.இப்படி செய்தால் கவலைகள் மறந்து புத்துணர்வு பெறலாம்.
3.சிலர் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிப்பதற்கு ஆசை கொள்வார்கள். இது மன கவலையை அதிகப்படுத்தும். இதனால் மனகவலையில் இருப்பவர்கள் மூலிகை டீயை எடுத்து கொள்ளலாம்.
4. எண்ணம்போல் வாழ்க்கை என்று சொல்வதை கேள்விபட்டிருப்போம். நமது சிந்தனையால் நம்மையே மாற்ற முடியும். காலையில் எழுந்தவுடன் பிரச்சினைகள் பற்றி யோசிக்காமல் அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றி யோசிப்பது சிறந்தது.
5. நம்முடைய வீட்டில் தான் சில ஞாபகங்கள் வருகின்றது என்றால் வீட்டின் அமைப்பை மாற்றுங்கள். இதுவும் புத்துணர்ச்சியை தரும்.
மேற்குறிப்பிட்ட டிப்ஸ்கள் உங்களின் வாழ்கைக்கு சரியாக வரவில்லையென்றால் உரிய மருத்துவரை நாடுவது சிறந்தது.