தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு அவென்ஜர்ஸ் பட இயக்குநர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ ஜகமே தந்திரம் ‘ திரைப்படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் 17 மொழிகளில் , 190 நாடுகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பட வெளியீட்டிற்கு அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் மற்றும் எண்ட் கேம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அந்தோனி மற்றும் ஜோ ரூசோ ஆகியோர் தனுஷை வாழ்த்தி ”சூப்பர் டா தம்பி”என டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
அந்தோனி மற்றும் ஜோ ரூசோ இயக்கத்தில் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.