கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிகளை திருடி பேஸ்புக் ஊடாக மிகக்குறைந்த விலைக்கு விற்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்களுடன் பழகுவதற்காக அந்த பணத்தை செலவழித்த நபரை கைது செய்துள்ளதாக தெமட்டகொட பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபர் 8 மாதங்களில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 21 முச்சக்கரவண்டிகளை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கரவண்டி திருட்டு
6 முச்சக்கரவண்டிகளையும், மீதமுள்ள முச்சக்கரவண்டிகளின் பாகங்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கிரிபத்கொடைக்கு குறைந்த விலைக்கு முச்சக்கரவண்டிகளை விற்பனை செய்ய நபர் ஒருவர் தொடர்பில் தெமட்டகொடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டாரவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அவர் வழங்கிய தகவலுக்கமைய, சந்தேகநபரை கைது செய்து விசாரணைக்குட்படுத்திய போதே இந்த திருட்டுச் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.