வடக்கு, கிழக்கு முழுவதும் எதிர்வரும் 20 ஆம் திகதி ஹர்த்தால் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஆதரவு கோரி யாழில் புதன்கிழமை (18) துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கக் கோரி வடக்கு கிழக்கு முழுவதும் துண்டுப் பிரசுர விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி மற்றும் மருதனார் மடம் சந்தைகளில் முதற்கட்டமாக இன்றையதினம் காலை துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
இதன்போது புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் தமிழ்க் கட்சிகளினால் இத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாகவும் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.