குரு பகவான் வியாழன் தனது ராசியை அடுத்த ஆண்டு 2024 இல் மாற்றப் போகிறார். குரு பெயர்ச்சியின் தாக்கத்தால், வரும் வருடம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாற்றமும் 12 ராசிகளுக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கிரகமும் தனது ராசியை மாற்ற ஒரு குறிப்பிட்ட காலம் எடுத்துககொள்கிறது.
கிரகங்களின் அதிபதியான வியாழன் சுமார் 13 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். இப்போது 2024 ஆம் ஆண்டில், தேவகுரு வியாழன் ராசியை மாற்றப் போகிறார். குரு தற்போது மேஷ ராசியில் அமர்ந்து அடுத்த ஆண்டு 2024 ஆம் ஆண்டில் ரிஷபம் ராசிக்குள் நுழைகிறார்.
பல ராசிக்காரர்களுக்கு குருவின் ராசி மாற்றத்தின் (Jupiter Transit In Taurus On 1 May, 2024) பலன் காரணமாக அதிர்ஷ்டம் கூடும். எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
தற்போது குரு மேஷ ராசியில் வக்ர நிலையில் (Guru Vakra Peyarchi) நகர்கிறது. டிசம்பர் 31 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி அடைவார்.
அதன்பிறகு அடுத்த ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி 2024, குரு மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்கு பெயர்ச்சி (Guru Peyarchi 2024) அடைவார்.
வரும் 2024 ஆண் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெற்று தரும். அதேபோல் மேஷ ராசிக்காரர்களின் பொருள் வசதிகள் கூடும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும்.
குருவின் அருளால் செல்வம் சேர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். இந்தக் காலத்தில் கடனில் இருந்து விடுபடலாம். வரும் 2024 ஆம் ஆண்டு வணிக வகுப்பினருக்கும் லாபம் நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தில் உங்களின் புகழ் உயரும். திடீர் பண ஆதாயம் கூடும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
2024 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் நல்ல செய்திகளைப் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் வருமானம் கூடும். உங்கள் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கலாம். வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் வெற்றி பெறலாம். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் அமையும். வருமானம் அதிகரிக்கும். அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. குடும்ப உறுப்பினர்களிடையே பாசமும் அன்பும் அதிகரிக்கும்.
குரு பகவானின் வியாழனின் சஞ்சாரம் / பெயர்ச்சி கன்னி ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த திட்டங்கள் இந்த காலக்கட்டத்தில் நிறைவேறும். உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். தொழில் சம்பந்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். நிலம், வீடு, வாகனம் வாங்கலாம்.

