தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் ஏ.ஆர் முருகதாஸ்.இவர் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் சமீபகாலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கிய இருந்தார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய சோசியல் மீடியா தலத்தில், இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, “எனது 23வது படத்திற்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”.
“உங்கள் கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் எனக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும், மேலும் ஷூட்டிங் எதிர்நோக்கி காத்து இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த ஏ.ஆர் முருகதாஸ், நன்றி சிவா, உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இருவரும் சேர்ந்து ஒரு சினிமாட்டிக் மேஜிக் செய்யலாம் என்று கூறியுள்ளார்.
ஏ.ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள இந்த படத்தின் கதை அம்சம் துப்பாக்கி படத்தை போல இருக்கும் என்று சொல்லப்படுகிறது.