யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஐக்கிய இராச்சியம் Coventry ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் விஜயகுமாரன் அவர்கள் 08-09-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சிவமணி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நகுலராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சயந், அஜந், பிரிஜந், சாயிவீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகங்கா, ரசிமாலா, றோஜினி, றயோசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உதயகுமாரன், ரதிகா, விமலகுமாரி, கணேசகுமாரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற இராஜராஜேஸ்வரி, புவனராஜேஸ்வரி, கேதீஸ்வரராஜா, குருபரராஜா, பாலராஜேஸ்வரி, மங்களராஜேஸ்வரி, சத்தீஸ்வரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரோகிற், திவானா, அஸ்வின், ஆயிஷா, அபர்ணா, லியானா, லக்சா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.