யாழ். சுண்டிக்குளி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு பொரளையை வதிவிடமாகவும், புரூணை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட மேரி பிலோமினா சின்னையா அவர்கள் 03-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து (அராவி), சூசைப்பிள்ளை இராசம்மா சூசைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற ஜோசப் மேக்பாலன் சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற உயர்ஸ்தானிகர் மேன்மை மிகு கிளரென்ஸ் பெலீஷியன் சின்னையா, அன்றூ கிரேசியன் சின்னையா(பிரித்தானியா), அல்பேர்ட் லக்ஸ்மன் சின்னையா(பிரித்தானியா), பேராசிரியர் டெரென்ஸ் றோகான் சின்னையா(புரூணை), வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை ஆகியோரின் நேசமிகு
தாயாரும்,
உயர்ஸ்தானிகர் மேன்மை மிகு ஷானி கல்யாணிரட்ன, பிறைடி சின்னையா, மனோரஞ்சி சின்னையா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லெமுவல் தனுஷன்(புரூணை), பெலீஷியா தனுஷயந்தி(புரூணை) ஆகியோரின் பிரியமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற மேரி ஜெர்மைன் பெர்டினண்ட்(அரியமலர் அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற மேரி மக்டலின் மரியநாயகம் (அற்புதமலர் – Luxembourg) ஆகியோரின் இணைபிரியாச் சகோதரியும் ஆவார்.