சிலருக்கு எந்த காரியத்தை எடுத்தாலும் தடைகள், தோல்விகள், பிரச்சனைகள், சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
நாம் நினைத்தது நடக்கவில்லை என்றால், நேரமே சரியில்லை என சோர்ந்து விடுவோம். ஆனால் தொடர்ந்து அதே நிலை நீடித்தால், விரக்தி மனநிலைக்கே சென்று விடுவோம்.
இப்படி துரதிஷ்டத்தால் துன்பப்படுபவர்கள் நம்பிக்கையுடன் ஒரே ஒரு மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் போதும், வாழ்வில் பல அற்புதமான மாற்றங்களை காண முடியும். மந்திரங்கள் அனைத்தும் மிகவும் சக்தி வாய்ந்தவையாகும். இவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பலன்களை தரக் கூடியவை.
மந்திரங்களை தொடர்ந்து பாராயணம் செய்பவர்களால் அந்த மந்திரத்தின் சக்தியை உணர முடியும்.
இந்த மந்திரங்களின் பலன்கள் அது சொல்லப்படும் நேரம், இடம், சொல்பவரின் மனநிலை ஆகியவற்றை பொறுத்து மாறுபடும். எந்த ஒரு மந்திரத்தையும் சரியான முறையில் உச்சரித்தால் அதன் பலனை பெற முடியும்.
அப்படி துரதிஷ்டத்தை போக்கக் கூடிய ஒரு சக்தி வாய்ந்த மந்திரம் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். துரதிஷ்டம் என்பது நமக்கு விருப்பமில்லாத ஒரு சூழ்நிலையில் இருந்து நம்மால் வெளி வர முடியாமல் செய்யும் ஒரு எதிர்மறை ஆற்றல் ஆகும்.
இது இழப்புகள், நாம் நினைப்பது அல்லது எதிர்பார்ப்பதற்கு நேர்எதிராக நடப்பது, தொடர்ந்து நமக்கு துன்பத்தை மட்டுமே இது தரும்.இதனால் வாழ்க்கையில் வளர்ச்சி என்பதே இல்லாத நிலை ஏற்படும்.
பொதுவாக கெடு பலன்கள், கண்ணுக்கே தெரியாத தடைகள், கெடு பலன்கள் ஆகியவற்றை போக்குவதற்கு துர்க்கா தேவியை நாம் வழிபடுவது வழக்கம்
. இந்த பிரபஞ்சத்திற்கே தாயாக விளங்கக் கூடியவள் துர்க்கா தேவி. இவரே படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களுக்கும் ஆதார சக்தியாக விளங்கக் கூடியவள். தனது பக்தர்களை தீய சக்திகளின் பிடியில் இருந்த காக்க கூடியவளும் துர்க்கா தேவி தான். அதோடு தடைகள் அனைத்தையும் நீக்கக் கூடியவள்.
துர்க்கைக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட்டால் சகல பிரச்சினைகளும் சரியாகழவிடும். அத்தகைய மகா சக்தியின் மந்திரங்களை கூறி வாழ்வில் சுபீட்சத்தை அடைவோம்
“தேஹி செளபாக்யம் ஆரோக்கியம் தேஹி மே பரமம் சுகம் ரூபம் தேஹி ஜெயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி!!” துரதிஷ்டத்தில் இருந்து விடுபட வேண்டும், வாழ்க்கையில் வளர்ச்சியை பெற வேண்டும், தடைகள் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த மந்திரத்தை விளக்கேற்றி வைத்து, முழு நம்பிக்கையுடன் 108 முறை சொல்லி வர வேண்டும்.
இந்த மந்திரத்தை சனிக்கிழமையில் பாராயணம் செய்ய துவங்குவது சிறப்பானதாகும். அதிகாலையில் எழுந்து, தெற்கு திசை நோக்கி அமர்ந்து, துர்க்கை அம்மனை மனதார வேண்டிக் கொண்டு இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.