திரையுலகில் கொடிகட்டி பறந்த முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் ராமராஜன். இவர் ரஜினியின் ஜெயிலர் மற்றும் லியோ குறித்து சமீபத்தில் பேசி இருக்கிறார்.
அவர் கூறுகையில் ‘ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்துள்ளது என்பதை நாம் கேள்விப்பட்டேன். ஆனால், இதுவரை நான் படம் பார்க்கவில்லை. இந்த வயதில் ரஜினிகாந்த் நடித்து வருவதை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்’ என கூறியுள்ளார்.
மேலும், லியோ படம் குறித்து பேசிய ராமராஜன் ‘விஜய்யின் லியோ திரைப்படத்தின் பிசினஸ் மாபெரும் அளவில் இருக்கிறது. ரஜினியை விட விஜய் படங்களின் பிசினஸ் அதிகமாக இருக்கிறது என கேள்விப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார்.
ராமராஜனின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. 62 வயதாகும் நடிகர் ராமராஜன் கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது சாமானியன் எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிற என்பது குறிப்பிடத்தக்கது.

