யாழ். நவாலி கிழக்கைப் பிறப்பிடமாவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சறோஜினிதேவி அவர்கள் 05-08-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், அன்னமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற பொன்னம்பலம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசாந்தி(லண்டன்), கிருபானந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகுமார்(லண்டன்), பிரதீபா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, தெய்வானைப்பிள்ளை மற்றும் அன்னம்மா(மன்னார்), திரவியம், பூமணி, நாகேந்திரம்(ஜேர்மனி), கிருபைராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சண்முகவடிவேல் மற்றும் றஞ்ஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுருதி(லண்டன்), சமீரா(லண்டன்), சஞ்சய்(லண்டன்), நேகா(லண்டன்), அர்ஜன்(லண்டன்), நிரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.