யாழில் இளைஞர் ஒருவர் 500 போதை மாத்திரைகளுடன் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றைய தினம் (03-08-2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐகத் விசாந்த தலமையிலான மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பண்ணைப் பகுதியில் தேடுதல் நடாத்தினர்.
இதன்போது குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற இளைஞர் ஒருவரை சோதனை செய்தபோது 500 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டது.
இதேவேளை, வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய குறித்த இளைஞர் யாழ்ப்பாணத்தில் உள்ள சாட்டிப் பகுதியில் தற்காலிகமாக தங்கிநிற்பவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சந்தேக நபரையும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட போதை மாத்திரைகளையும் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.