பிரபல தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சிரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஸ்ருதி ஷண்முகப்பிரியா.
இவர் நாதஸ்வரம் சிரியலை தொடர்ந்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா போன்ற பல தொடர்களில் நடித்து வந்தார்.’
மேலும், இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், ஸ்ருதி ஷண்முகப்பிரியா கடந்த ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் பங்கேற்று 2வது பரிசை வென்ற அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இவர் சின்னத்திரையில் இருந்து விலகி இருந்தார்.
இந்த நிலையில், ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
30 வயதான அரவிந்த் சேகரின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரின் மறைவிற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து, ஸ்ருதிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.