வவுனியா – சாந்தசோலை பகுதியில் பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்.கியதாக கூறப்படும் சந்தேக நபரைக் வவுனியா பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுள்ளனர்.
முகக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரை பொதுச் சுகாதார பரிசோதகர் எச்சரித்தபோது அதனை கவனத்திற் கொள்ளாத இளைஞர் பொதுச்சுகாதார பரிசோதகரை தாக்கியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
25 வயதுடைய இளைஞரே ஒருவரே இவ்வாறு பொதுச் சுகாதார பரிசோதகரை தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் அவரை தற்போது கைது செய்து மேலதிக நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன்,
அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படும் பொதுச்சுகாதார பரிசோதகர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.