யாழில் தொடர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உரும்பிராயைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சுகந்தன் ஜான்சி என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்கள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவ் ஆசிரியை தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திடீரென உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
அவரது உடற்கூற்று மாதிரிகள் பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.