மார்ச் 8-ஆம் திகதி தொடங்கி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளியில் குழந்தைகளுடன் உள்ள குடும்பங்களுக்கு இலவச கொரோனா வைரஸ் வீட்டு சோதனை கருவிகள் வழங்கப்படும் என்று பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
அறிகுறிகள் உள்ளதா என்பதைப் பொருட்படுத்தாமல் குழந்தைகளின் வீடுகளுக்கு வாரத்திற்கு இரண்டு முறை இலவச சோதனை கருவிகள் (Free Coronavirus Home Test Kits) வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஸ் டிரைவர்கள் உட்பட பள்ளிகளில் பணிபுரியும் பெரியவர்களுக்கும் இந்த சோதனைகள் வழங்கப்படவுள்ளது.
வீடுகளில் பெற்றோர்களும் தங்களுக்கான கொரோனா சோதனையை எடுத்துக்கொள்வதன் மூலம், பள்ளிகள் மேலும் ஒரு அடுக்கு பாதுகாப்பானதாக உறுதிசெய்யப்படும் என கல்வித்துறை செயலாளர் Gavin Williamson கூறியுள்ளார்.
ஜனவரி முதல் முக்கிய தொழிலாளர்களின் குழந்தைகள் தவிர பிரித்த்னையாவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசாங்கம் அறிவித்துள்ள 4-கட்ட ஊரடங்கு தளர்வு நடவடிக்கையின், முதல் நிலையாக வரும் மார்ச் 8-ஆம் திகதி அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படவுள்ளது.