யாழில் உள்ள புனித பத்திரிசியார் கல்லூரிக்கு அருகில் மத்தியூஸ் வீதியில் நாட்டப்பட்டிருந்த நிழல்தரும் மரங்களை சில விஷமிகள் மதுபோதையில் வெட்டியுள்ளனர்.
நேற்று முன்தினம் (31-07-2023) சனிக்கிழமை இரவு கூடிய விஷமிகள் மதுபோதையில் நிழல்தரும் மரங்களை முறித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
யாழ்ப்பாண மாநகர சபை முன்னாள் உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்ட குறித்த பகுதியில் நிழல்தரும் மரங்கள் லயன்ஸ் கழகத்தின் பங்களிப்புடன் நாட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.