மட்டக்குளி முதல் கங்காராமை வரையில் சேவையில் ஈடுபடும் 145 ஆம் இலக்க தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை புறக்கணிப்பு இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
260 ஆம் இலக்க பேருந்துகளை 155 ஆம் இலக்க பேருந்து சாலைகளில் சேவையில் ஈடுபடுத்த மேல் மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சேவை புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.