கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதம் ஒன்றில் பயணித்த பயணி ஒருவரின் தகாத செயலால் , அதில் பயணம் செய்த இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தனது கைபேசியில் எதிரில் இருந்த யுவதியை தகாத முறையில் குறித்த பயணி காணொளி எடுத்த நிலையில் அதனை அவதானித்த இளைஞர்கள் நன்றாக கவனித்துள்ளனர்.
தனது கைத் தொலைபேசியை சூம் பண்ணி யுவதியின் அந்தரங்கப் பகுதியை குறித்த பயணி காணொளி எடுத்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சந்தேக நபரை நையப்புடைத்த இளைஞர்கள், பெண்ணின் காலை தொட்டு மன்னிப்பும் கேட்க வைத்துள்ளனர். குறித்த காணொளி சமூக வலைத்தளைங்களில் வெளியாகியுள்ளது.
எனவே பேருந்துகளில் , புகையிரதங்களில் வெளியிடங்களுக்கு பயணிக்கும் யுவதிகள் இதுப்[ஓன்றவர்கள் தொடர்பில் மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.