தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் சனம் செட்டி சமீபத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் ரசிகர்களால் வெறுக்கப்பட்ட சனம் ஷெட்டி பின்னர் தன்னுடைய நல்ல குணத்தை மக்களுக்கு காட்டி பேராதரவைப் பெற்றார்.
சன் டிவியில் பிரபல நடிகராக வலம் வந்தவர் ராகவ்(). இவர் தமிழில் நஞ்சுபுரம் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு சினிமாவில் பெரிய அளவுக்கு வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களை ஏமாற்றினார்.
பின்னர் ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தை கூட ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இருந்தாலும் ஏனோ இவரை ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் தற்போது விடாமுயற்சியால் மீண்டும் டிக்கெட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தில் ராகவ் ஜோடியாக பிக்பாஸ் புகழ் சனம் செட்டி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை அவரே எழுதி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் 46 வயதான சன் டிவி சீரியல் நடிகருடன் டிக்கெட் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார் சனம் ஷெட்டி டீசர் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.