யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி துரைசிங்கம் அவர்கள் 17-07-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
வேலுப்பிள்ளை துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சாந்தினி, சந்திரகுமார் மற்றும் சாந்தகெளரி, சதீசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம், இரமலிங்கம், சண்முகநாதன், கதிர்காமநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவபாக்கியம், தேவி, தேவமனோகரி, இராசம்மா, காலாஞ்சென்ற வனேச்வரி, கனகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவசுதன், சிவராம், ஜெயராம், சிவாஜினி, சிறி, காலஞ்சென்ற ரகுராம், கிரிராம், வசி, துளசி, சுதாஜினி, கங்கீதன், உதயாகீதன், கங்காயினி, மெலனி, கபிலகீதன், சிறிராம், விஜிதா, குககீதன், அமித்திரன் ஆகியோரின் ஆசை மாமியாரும்,
ஆரணன், சுவர்ணன், பிரதூஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.