கொழும்பு- மஹரகம அபேக்சா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவின் கதிரியக்க நிபுணர்களால் நோயாளர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை காணப்படுவதாக கடும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
கதிரியக்க நிபுணர்களின் அசமந்த போக்கினால் 490க்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருக்கின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு காத்திருக்கும் நோயாளர்களில் அவசரமாக சிகிச்சை தேவைப்படுபவர்களும் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஒருநாள் தாமதம் கூட நிலைமையை குணப்படுத்த முடியாததாக மாற்றும் உயிரை காப்பாற்ற முடியாததாக மாற்றிவிடும் என புற்றுநோயியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னர் மணித்தியாலத்திற்கு 8 முதல் 10 நோயாளிகளிற்கு சிகிச்சைவழங்கப்பட்ட நிலையில் தற்போது தொழில்நுட்பவியலாளர்களின் திறமையின்மை காரணமாக மணித்தியாலத்திற்கு நான்கு அல்லது ஐந்து பேருக்கு மாத்திரம் சிகிச்சை வழங்கமுடிவதாகவும நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் நடவடிக்கையை கண்டித்துள்ள மருத்துவர்கள் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நோயாளிகளின் உயிரை காப்பாற்ற இதற்கு தீர்வை காணவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.