பொரளை, சஹஸ்புர வீடமைப்புத் தொகுதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
இதன் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொரளை பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்று (16) காலை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரும், மேலும் இரு சந்தேக நபர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.