பிரான்சில் நடைபெற்று வரும் உலக பரா மெய்வல்லுனர் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் தினேஸ் பிரியந்த வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் குறித்த போட்டியில் 65.38 மீற்றர் தூரத்தில் ஈட்டி எறிந்துள்ளதுடன் 65.41 மீற்றர் தூரத்தில் ஈட்டி எறிந்த இந்தியாவின் அஜித் சிங் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
குறித்த போட்டியின் வெள்ளிப்பதக்கம் இந்தியா வசமாகியது.
இந்தியாவின் புதுடில்லியில், இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் பளுதூக்கல் போட்டியில், தங்கம் உள்ளிட்ட 8 பதக்கங்களை பெற்ற இலங்கை அணி நாட்டுக்கு வந்துள்ளது.
ஒரு தங்கம், 4 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களும் பெற்று இலங்கை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.