யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பிரம்படி , சரவணை மேற்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை வர்ணகுலசிங்கம் அவர்கள் 07-07-2023 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் சபாபதிப்பிள்ளை இராசம்மா சபாபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
மகேஸ்வரன்(கனடா), Dr. வாணி(USA), வாசுகி(பிரித்தானியா), குமரேஸ்வரன்(அவுஸ்திரேலியா), ஜெகதீஸ்வரன்(பிரித்தானியா), Dr. சர்வேஸ்வரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருமகள், பிரேம்ஜித், சிவகரன், Dr. தேவிக்கா, அமுதா, Dr. தாரிணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பராசக்தி இராசகோபால், சரோஜினி படிகலிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர் USA), குலராஜாசிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர் கனடா), Dr. குலத்துங்கம்(USA) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சறோஜினிதேவி குலராஜாசிங்கம், Dr. மனோரஞ்சிதம் குலத்துங்கம், தற்பராதேவி தில்லைநாதன், காலஞ்சென்றவர்களான இராசகோபால், படிகலிங்கம், இரட்ஷணியதேவி சண்முகம்பிள்ளை, கிருபாதேவி மகாராஜா, தவநாயகம், மகாதேவி சங்கரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சர்மீரன், Dr. பிரணீதா, Dr.பிரசீதா, Dr.பிரசோபன், ஷாமியன், சுமன், அவிக்னன், கனிஷ்னா, விஹான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ரிஷான், ஜான்ஸி, அக்ஷாரா, இனீயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.