கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகலகம் வீதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை (05) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த 25 வயதுடைய இளைஞர் நாகலகம் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு குழு அவரைத் துரத்திச் சென்று தாக்க முற்பட்டபோது அவர் அவர்களிடமிருந்து தப்பிக்க அருகில் உள்ள கடை ஒன்றுக்குள் ஓடியுள்ளார்.
அதன்போது அவரை துரத்திச் சென்ற குழுவினர் அந்த இளைஞரை கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற நிலையில் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.