கொழும்பில் உள்ள பாரிய கட்டிடங்கள் நில அதிர்வுகள் காரணமாக ஆபத்தான நிலையில் இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு கடல் பிராந்தியத்தில் சமீபத்தில் ஏற்பட்ட அதிர்வு இலங்கையின் பல பகுதிகளிலும் குறிப்பாக மேல் மாகாணத்தின் கொழும்பு பகுதியிலும் உணரப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், மேல்மாகாணத்தில் உயரமான கட்டிடங்களுக்கு நிச்சயம் சில பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்று பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இலங்கையில் புதிய மற்றும் பழைய கட்டிடங்கள், குறிப்பாக உயரமான கட்டிடங்கள் வகைப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த கட்டிடங்கள் பூமியின் புவியியல் நிலைமைகளுக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளனவா? நிலநடுக்கங்களை தாங்குமா என்பதை அடையாளம் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கட்டிடங்களின் அஸ்திவாரங்கள் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளனவா என்பதை அடையாளம் காண்பது மிக முக்கியமான விடயம் என பேராசிரியர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆபத்தான கட்டிடங்கள் இருப்பின் அவற்றை சில முறைகள் மூலம் சீர்செய்ய முடியும் எனவும், ஏதாவது ஒரு வகையில் சரி செய்ய முடியாவிட்டால், அந்த கட்டிடங்களை அகற்றி ஆபத்தான சூழ்நிலையை தவிர்க்க முடியும் எனவும் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்தார்.