இந்தியாவின் பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியால் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாண மாணவி ஒருவரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழை சேர்ந்த கில்மிசா (kilmisha ) என்ற மாணவியே கலந்து கொண்டு பாட்டு பாடி அசத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அவர் நிகழ்ச்சியில் தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள குறித்த இசை நிகழ்வில் பங்கேற்பது யாழ்ப்பாண மண்ணுக்கு பெருமை என சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.
மாணவி கில்மிசா இயல்பாகவே சிறப்பாக பாடும் திறனை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் குறித்த நிகழ்ச்சியில் மாணவி பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.